காவல் துறை விசாரணையில் உயிரிழந்த அஜித்தின் குடும்பத்துக்கு தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே விசாரணைக்காக அழைத்துச் சென்ற இளைஞா் அஜித்குமார் போலீஸ் விசாரணையில் உயிரிழந்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு காவல் துறைக்கு பெரும் களங்கத்தையும் உண்டாக்கியிருக்கிறது.
இந்தநிலையில், விசாரணையில் உயிரிழந்த இளைஞர் அஜித்குமார் குடும்பத்தாரிடம் இன்று முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தொலைபேசி வழியாக தொடர்புகொண்டு ஆறுதல் தெரிவித்தார்.
இந்த தொலைபேசி உரையாடலின்போது, அஜித்குமாரின் குடும்பத்திடம் ஆழ்ந்த இரங்கலை பதிவு செய்த முதல்வர் அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்து கொடுக்கும் என்று வாக்குறுதி அளித்திருப்பதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.