முதல்வர் ஸ்டாலின் 
செய்திகள்

மதுரை எய்ம்ஸ் என்ன விண்வெளி மையமா…? - மத்திய அரசை விளாசிய முதல்வர் ஸ்டாலின்!

Staff Writer

பத்து ஆண்டுகளுக்கும் மேலாகக் கட்ட, மதுரை எய்ம்ஸ் என்ன விண்வெளி மையமா என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

சேலம் வந்திருக்கும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இன்று காலை, மேட்டூர் அணையிலிருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறந்து வைத்தார்.

பிறகு சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், பத்து ஆண்டுகளுக்கு முன்பு உங்கள் அரசு அறிவித்த மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை என்ன நிலையில் உள்ளது என்று பார்த்தீர்களா? 10 ஆண்டுகளாக கட்டுவதற்கு அது என்ன எய்ம்ஸா? அல்லது விண்வெளி ஆராய்ச்சி நிலையமா? தேவையான நிதியை ஒழுங்காக ஒதுக்கியிருந்தால் 2 ஆண்டுகளில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டி முடித்திருக்கலாமே?

மதுரையை சுற்றி ஏராளமான பணிகளை நாங்கள் முடித்திருக்கிறோம். மூன்றாவது மீட்கப்பட்டவர்கள் அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

முறையாக ஆட்சியமைத்த நீங்கள் தமிழ்நாட்டுக்கு செய்த ஒரு சிறப்பு திட்டத்தைக் கூறுங்கள்? 11ஆண்டுங்களாக தமிழத்துக்குச் செய்த திட்டங்கள் என்ன? சொல்லுங்கள். பட்டியல் இதுவரை தரவில்லை. சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழர்களின் தொன்மையை அழிக்க, மறைக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. ஆனால் இதையெல்லாம் கேள்வி கேட்க வேண்டிய எதிர்க்கட்சித் தலைவர், கூட்டணியில் உள்ளார்.

பிரதமர் பேரில் தரும் திட்டத்துக்கு மாநில அரசே 50 சதவீத நிதி தருகிறது. படையப்பா படத்தைப் போல மாப்பிள்ளை அவர்தான் சட்டை என்னுடையது என மத்திய அரசு கூறி வருகிறது. மத்திய அரசு திட்டங்களுக்கும் மாநில அரசுதான் நிதி கொடுத்து வருகிறது. இப்படியிருக்க, நாம் நிதியை மடை மாற்றுவதாக அமித் ஷா எந்த அடிப்படையில் குற்றம்சாட்டுகிறார்? தமிழகத்துக்கான திட்டங்களுக்கு எந்த நிதியும் கொடுக்காமல் இருப்பது மத்திய பாஜக அரசுதான். ஆனால், மத்திய உள்துறை அமைச்சர் அப்படியே மத்தி பேசுகிறார். என்றும் ஸ்டாலின் கூறியிருக்கிறார்.