திருமணம் ஆன பெண்கள் நெற்றியில் வைக்கும் குங்குமத்தை குறிக்கவே, ராணுவ நடவடிக்கைக்கு சிந்தூர் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
பெகல்காம் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தான் மீது இந்தியா இன்று அதிரடி தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த தாக்குதலுக்கு "ஆபரேஷன் சிந்தூர்" என்று பெயரிடப்பட்டுள்ளது.
திருமணம் ஆன பெண்கள் நெற்றி வடுகில் வைக்கும் குங்குமம் 'சிந்தூர்' என அழைக்கப்படும். பெகல்காம் தாக்குதலில் கணவரை இழந்த பெண்களுக்காக பழிதீர்க்கவே 'ஆபரேஷன் சிந்தூர்' என்று வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பெகல்காம் தாக்குதலில் பல பெண்கள் கண் எதிரில் அவர்கள் கணவன் சுட்டுக்கொள்ளப்பட்டு தங்கள் குங்குமத்தை இழந்தனர். திருமணத்திற்கு பிறகு தேனிலவுக்கு சென்ற இந்திய கடற்படை அதிகாரி ஒருவரும் அவர்களில் ஒருவர் ஆவார்.
பெண்கள் நெற்றியில் வைக்கும் குங்குமத்தை குறிக்கவே, இந்த ராணுவ நடவடிக்கைக்கு 'ஆபரேஷன் சிந்தூர்' என பெயர் சூட்டப்பட்டுள்ளது.