சமையல் எரிவாயு சிலிண்டர் 
செய்திகள்

எகிறிய சிலிண்டர் விலை… மக்களுக்கு அதிர்ச்சி!

Staff Writer

சமையல் எரிவாயு விலை சிலிண்டருக்கு ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். மானிய விலை மற்றும் பொதுப் பிரிவு வாடிக்கையாளர்களுக்கு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

உஜ்வாலா திட்டத்தின் கீழ் 14.2 கிலோ எல்பிஜியின் விலை 500லிருந்து 550 ஆகவும், உஜ்வாலா அல்லாத பயனர்களுக்கு 803லிருந்து 853 ஆகவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நாளைமுதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு உயர்த்தியுள்ள நிலையில், கியாஸ் சிலிண்டர் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.