கூலி திரைப்படத்தில் ரஜினிகாந்த் 
செய்திகள்

கூலி... 3 நாள் வசூல் எவ்வளவு?

Staff Writer

நடிகர் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ் இணைகிறார்கள் என்கிற அறிவிப்பு வந்தபோதே பலருக்கும் ஆர்வம் மேலோங்க, தொடர்ந்து, கூலி திரைப்படத்தில் நடிகர்கள் நாகர்ஜூனா, உபேந்திரா, ஆமீர் கான் உள்ளிட்ட பிரபலங்கள் இணையவும் நிச்சயமாக வணிக ரீதியாக இப்படம் தமிழில் சாதனையை நிகழ்த்தும் என கணிக்கப்பட்டது.

அதேபோல், படத்திற்கான புரமோஷன்கள் மற்றும் எதிர்பார்ப்பு உச்சமடைய பிரம்மாண்டமாக கடந்த வியாழக்கிழமை திரையரங்குகளில் வெளியானது.

ஆனால், மோசமான கதை மற்றும் திரைக்கதையாலும் அதனால் உருவான லாஜிக் பிரச்னைகளாலும் கூலி திரைப்படம் கடுமையான எதிர்வினைகளைச் சந்தித்துள்ளது.

இதனால், படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜைப் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் கூலி திரைப்படம் முதல் 3 நாள்களில் ரூ.280 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படம் முதல் நாளிலேயே ரூ. 151 கோடி வசூலித்திருந்தது குறிப்பிடத்தக்கது.