கூலி திரைப்படத்தில் ரஜினிகாந்த் 
செய்திகள்

கூலி படத்தின் டிக்கெட் ரூ. 2000 மா? – ரசிகர்கள் அதிர்ச்சி!

Staff Writer

கூலி திரைப்படத்தின் டிக்கெட் ரூ. 2000க்கு விற்பனை செய்யப்படுவது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 'கூலி' படத்தின் முன்பதிவு நேற்று முதல் இந்தியாவில் ஆரம்பமானது. தமிழ்ப் படங்களுக்கென்று தனி வரவேற்பு இருக்கும் கேரளா, பெங்களூரு ஆகிய இடங்களில் இப்படத்திற்கான முன்பதிவு மிகவும் விறுவிறுப்பாக ஆரம்பித்துள்ளது. சில மணி நேரங்களிலேயே ஆயிரக்கணக்கான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது

தமிழகத்தில் முதல் காட்சி காலை 9 மணிக்குத்தான் இருக்கும். ஆனால், மற்ற மாநிலங்களில் காலை 6 மணிக்கே காட்சிகள் ஆரம்பமாகிறது. ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் இன்னும் முன்பதிவு ஆரம்பமாகவில்லை.

இதனிடையே, பெங்களூரு மாநகரில் இன்று காலை ஆரம்பமான முன்பதிவில் அதிகபட்ச டிக்கெட் கட்டணமாக ரூ.2000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள ஸ்வாகத் ஷங்கர்நாக தியேட்டரில் அதிகாலை 6.30 காட்சிக்கான டிக்கெட் கட்டணம் 2000 ரூபாயாக உள்ளது. அதற்கடுத்து 1500, 1000 ரூபாய் கட்டணங்கள் அவை அனைத்துமே உடனடியாக முன்பதிவு செய்யப்பட்டுவிட்டது.

அதேபோல், தமிழ்நாட்டுல் ரூ. 200க்கு விற்பனை செய்யப்பட வேண்டிய டிக்கெட் 400க்கு விற்பனை செய்யப்படுவதாக ரசிகர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

நேற்று பொள்ளாச்சியில் உள்ள ஒரு தியேட்டரில் இரு டிக்கெட்டின் விலை ரூ. 400க்கு விற்பனை செய்யட்டது. இது தொடர்பான வீடியோவும் சமூக ஊடகத்தில் வைரலானது. இதனால் விநியோகஸ்தர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் ரஜினி ரசிகர்கள்.

தற்போதைய நிலவரப்படி முன்பதிவில் மட்டும் 50 கோடி வசூலை கூலி படம் நெருங்கியுள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் நிலவரங்கள் தெரிவிக்கின்றன.