முதல்வர் ஸ்டாலினுடன் இசையமைப்பாளர் இளையராஜா 
செய்திகள்

இளையராஜா திரையிசை பயணத்தை கொண்டாட முடிவு! - முதல்வர் ஸ்டாலின்

Staff Writer

இசையமைப்பாளர் இளையராஜாவின் அரை நூற்றாண்டுகாலத் திரையிசைப் பயணத்தை அரசின் சார்பில் கொண்டாட முடிவெடுத்துள்ளோம் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இசைஞானி இளையராஜா லண்டனில் உள்ள ஈவன்டின் அப்போலோ அரங்கத்தில் கடந்த மார்ச் 8ஆம் தேதி தனது முதல் சிம்பொனி இசையை அரங்கேற்றினார். இதற்கு பல தலைவர்கள், பிரபலங்கள், ரசிகர்கள், அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், முதல்வர் ஸ்டாலினை, இளையராஜா சந்தித்து பேசினார்.

இதனைத் தொடர்ந்து ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

லண்டனில் சிம்பொனி சாதனை படைத்துத் திரும்பியுள்ள இளையராஜா, அவரது பயணத்துக்கு வாழ்த்திய என்னை நேரில் சந்தித்து நன்றி கூறினார். அவரது அரை நூற்றாண்டுகாலத் திரையிசைப் பயணத்தை அரசின் சார்பில் கொண்டாட முடிவெடுத்துள்ளோம்!

ராஜாவின் இசை ராஜ்ஜியத்தில் வாழும் ரசிகர்களின் பங்கேற்போடு இந்த விழா சிறக்கும்! இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் கூறியுள்ளார்.