இயக்குநர் கெளதம் மேனன் பகிர்ந்த புகைப்படம் 
செய்திகள்

இயக்குநர்கள் சங்கம்… கெளதம் மேனன் பகிர்ந்த வைரல் புகைப்படம்!

Staff Writer

இயக்குநர் கௌதம் வாசுதேவ மேனன் சக இயக்குநர்களுடனான புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களான மணிரத்னம், ஷங்கர், கௌதம் வாசுவே மேனன், மிஷ்கின், லிங்குசாமி, வசந்த பாலன், சசி, பாலாஜி சக்திவேல், நெல்சன் உள்ளிட்டோர் மலை பிரதேசத்தில் மகிழ்ச்சியாக இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

இவர்கள் சந்தித்துக்கொண்டதை இயக்குநர் கௌதம் வாசுதேவ மேனன் புகைப்படம் வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

அவரின் பதில், “ஒன்றுமில்லை ஆனால் மரியாதை, வியப்பு, உரையாடல், இசை, கதைகள், நட்பு, குளிர், அரவணைப்பு மற்றும் அன்பு” எனக் குறிப்பிட்டுள்ளார். இப்புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அடிக்கடி, இந்தக் கூட்டணி சந்தித்து திரைப்படங்கள் மற்றும் திரைக்கதைகள் குறித்து உரையாடி வருகின்றனர்.