தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நாளை நடைபெறுகிறது.
அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காலை 10.30 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய நிதிநிலை அறிக்கைக் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நாளைமறுநாள் மார்ச் 10ஆம் தேதி தொடங்கும்நிலையில், இக்கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்துக்கான நிதிப்பகிர்வு மறுப்பு, தொகுதி மறுவரையறை போன்ற சில முக்கிய பிரச்னைகள் இந்தத்தொடரில் சூடாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தி.மு.க. உறுப்பினர்கள் எப்படிச் செயல்படுவது என இக்கூட்டத்தில் விவாதித்து முடிவுசெய்யப்படும்.