இயக்குநர் ஷங்கர் 
செய்திகள்

எல்லோருக்கும் இந்த உரிமை இருக்கு! – இயக்குநர் ஷங்கர்!

Staff Writer

திரைப்படத்தை விமர்சிக்கும் உரிமை எல்லோருக்கும் இருப்பதாகவும் அதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் எனவும் இயக்குநர் ஷங்கர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், “விமர்சனத்தை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். எல்லோருக்கும் விமர்சிக்கின்ற உரிமை உள்ளது. அதை சவாலாக எடுத்துக்கொள்ள வேண்டியதுதான். இதில் ஒரே ஒரு விஷயம் என்னவென்றால், ஒரு படத்துக்கு பின்னால் லட்சக்கணக்கான தொழிலாளர்களுடைய வாழ்வாதாரம் இருக்கிறது. அதைத்தான் யோசிக்கவேண்டும்.” என்று கூறியுள்ளார்.