லாஸ் ஏஞ்சலசில் காட்டுத்தீயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. காட்டுத்தீ பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என அந்நாட்டு வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் சில நாள்களுக்கு முன் காட்டுத் தீ ஏற்பட்டது. பாலிசேட்ஸ், ஈட்டன், அல்டாடெனா ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. 'வரும் நாட்களில் நிலைமை மோசமடையும். மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
காற்று அதி வேகமாக இருப்பதால் தீப்பிழம்புகள் விரைவில் பரவுகின்றன. இதனால் தீயை அணைக்கும் பணியை கடினமாக உள்ளது என தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
காட்டுத்தீயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. 23,700 ஏக்கர் எரிந்துவிட்டது. மேலும் 11 சதவீதம் மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டது. மிகவும் தீவிரமாக இருக்கும். பாதிக்கப்பட்டவர்களின் உடல்களை தேடும் பணி நடந்து வருகிறது. உடல்களை தேடும் பணியில், மோப்ப நாய்கள் உதவியுடன் நடந்து வருகிறது.
இந்த காட்டுத்தீயாவில் வளர்ப்பு பிராணிகள் உட்பட வன விலங்களும் அதிக அளவில் உயிரிழந்துள்ளன. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
காட்டுத் தீ காரணமாக, லாஸ் ஏஞ்சலஸ் நகரில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. பொழுதுபோக்கு, விளையாட்டு மற்றும் சமுதாய நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. லாஸ் ஏஞ்சலஸ் நகரில் காட்டுத் தீ காரணமாக கடும் புகைமூட்டமாகப் பல பகுதிகளில் காணப்படுகிறது. இதனால், மக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் என எச்சரித்து உள்ளனர்.