பள்ளிக் கல்வித்துறை வளாகம் 
செய்திகள்

+2 தேர்வு- முதல் ஐந்து இடங்களைப் பிடித்த மாவட்டங்கள் விவரம் என்ன?

Staff Writer

தமிழக பள்ளிக்கல்வித் துறையின் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலையில் வெளியிடப்பட்டன. இதில், அரியலூர் மாவட்ட மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளனர்.

முதல் ஐந்து இடங்களைப் பிடித்த மாவட்டங்கள்:

1. அரியலூர்- 98.82 சதவீதம்

2. ஈரோடு- 97.98 சதவீதம்

3. திருப்பூர்- 97.53 சதவீதம்

4. கோயம்புத்தூர்- 97.48 சதவீதம்

5. கன்னியாகுமரி- 97.01 சதவீதம்