விசிக தலைவர் தொல். திருமாவளவன் 
செய்திகள்

‘ஓ.பன்னீர்செல்வத்துக்கு நல்ல காலம் பிறந்திருக்கிறது’

Staff Writer

“ஓ. பன்னீர்செல்வத்துக்கு நல்ல காலம் பிறந்து இருக்கிறது என்று நான் நம்புகிறேன்'' என விடுதலை சிறுத்தைக் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இரண்டு முறை சந்தித்திருப்பது தமிழக அரசியலில் விவாதத்தை கிளப்பியுள்ளது.

முதல்வர் – ஓபிஎஸ் சந்திப்பு குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் தொல். திருமாவளவனின் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில்: “இதை நான் மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன். ஓபிஎஸ் என்ன நோக்கத்தில் முதலமைச்சரை சந்தித்தார் என்று எனக்கு தெரியாது. ஆனால் அவர் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டார் என்பது அவருக்கு நல்ல காலம் பிறந்து இருக்கிறது என்று நான் நம்புகிறேன்.” என்றார்.