ஆளுநர் ஆர். என். ரவி 
செய்திகள்

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்

Staff Writer

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2 சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி இன்று ஒப்புதல். அளித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போடுவதையே வாடிக்கையாக கொண்டிருப்பவர் ஆளுநர் ஆர். அப்படி இதுவரை 12 மசோதாக்கள் கிடப்பில் உள்ளன.

இது தொடர்பாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை நாட, ஆளுநர் ரவிக்கு கண்டனத்தை தெரிவித்த நீதிமன்றம், ஆளுநருக்கு என்று ஏதேனும் சட்டவிதிகள் தனியாக உள்ளதா? என்று கேள்வி எழுப்பி இருந்தது.

இந்த நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஊரக உள்ளாட்சிகளுக்குத் தனி அதிகாரிகள் நியமனம் மற்றும் கனிமங்களைக் கொண்டுள்ள நிலங்களுக்கு வரி விதிப்பது ஆகிய சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

28 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனி அலுவலர்களை அரசு நியமிப்பது தொடர்பான சட்ட மசோதா கடந்த ஜனவரி மாதமும், தமிழ்நாட்டில் கனிமங்களைக் கொண்டுள்ள நிலங்களுக்கு வரி விதிப்பது தொடர்பான சட்ட மசோதா சட்டப்பேரவையில் கடந்த டிசம்பர் மாதமும் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.