ரஜினி - அனிருத் 
செய்திகள்

கூலி படம் எப்படி உள்ளது? – ஒரே வார்த்தையில் பதில் கொடுத்த அனிருத்!

Staff Writer

கூலி திரைப்படத்தைப் பார்த்துவிட்டதாகவும், படம் நெருப்பு மாதிரி இருப்பதாகவும் இசையமைப்பாளர் அனித் கூறியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான கூலி திரைப்படம் தங்கக் கடத்தலை மையமாக வைத்து ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ளது.

படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத், தாய்லாந்த் உள்ளிட்ட பல பகுதிகளில் நடைபெற்று அண்மையில் நிறைவடைந்தது. தற்போது, அடுத்தக்கட்ட பணிகள் தொடங்கியுள்ளன.

இந்த நிலையில், நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற அனிருத்திடம், ‘நீங்கள் இசையமைக்கும் படங்கள் எப்படி இருக்கிறது என்பதை எக்ஸ் தளத்தில் எமோஜிகள் மூலம் தெரிவிப்பீர்கள். அப்படி, கூலி திரைப்படத்திற்கு என்ன எமோஜி வைத்திருக்கிறீர்கள்?” எனக் கேட்கப்பட்டது

அதற்கு அனிருத், “நான் இப்போது படம் குறித்து எமோஜிகள் இடுவதில்லை. கூலி திரைப்படத்தைப் பார்த்துவிட்டேன். நெருப்பு மாதிரி இருக்கிறது. இங்கேயே தீ எமோஜியை பதிவுசெய்கிறேன்.” என்றார்.

கூலி திரைப்படம் நன்றாக இருப்பதாக அனிருத் சொன்னது ரஜினி ரசிகர்களிடம் உற்சாகத்தை அளித்துள்ளது.