அண்ணாமலைக்கு தைரியம் இருந்தால் அண்ணா சாலை பக்கம் வரச் சொல்லுங்கள் என்று துணை முதலமைச்சர் உதயநிதி சவால் விடுத்துள்ளார்.
கரூரில் நேற்று மாலை நடைபெற்ற பட்ஜெட் விளக்க கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, "நீ சரியான (உதயநிதி) ஆளாக இருந்தால் ‘GET OUT MODI’ என்று சொல்ல முடியுமா? நீ சொல்லிப்பாரு...” என்று உதயநிதியை ஒருமையில் பேசியிருந்தது சர்ச்சை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ”பிரச்னையை திசை திருப்ப முயற்சிக்கிறார் அண்ணாமலை. தமிழகத்திற்கான நிதியை பெற்றுத்தர துப்பில்லை. போஸ்டர் ஒட்டுவதெல்லாம் ஒரு பெரிய சாதனையா? வரச் சொல்லுங்க, நான் வீட்டுகிட்ட தான் இருப்பேன். இன்று மாலை இளைஞரணி நிகழ்ச்சி இருக்கிறது. ஏற்கனவே அறிவாலயம் பக்கம் ஏதோ செய்வேன் என்று அண்ணாமலை சொன்னார். தைரியம் இருந்தால், அண்ணா சாலை பக்கம் வரச் சொல்லுங்க.” என்றார்.