செய்திகள்

‘1000 ஆண்டுகளாக இந்தியா பாகிஸ்தான் இடையே சண்டை’ – யோவ் டிரம்ப்... என்னய்யா இது?

Staff Writer

காஷீர் விவகாரத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஆயிரம் ஆண்டுகளாகப் போராடி வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியதை தொடர்ந்து, அவரை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள நேற்று வாடிகனுக்குச் சென்றார். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், “இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் நான் மிகவும் நெருக்கமாக உள்ளேன். காஷ்மீருக்காக இரு நாடுகளும் ஆயிரம் ஆண்டுகளாக சண்டையிட்டு வருகின்றன.

பெகல்காம் தாக்குதல் மிகவும் மோசமான ஒன்று. இரு நாடுகளுக்கு இடையே ஆயிரத்து 500 ஆண்டுகளாக எல்லை பிரச்சினை நிலவுகிறது. ஆனால், இந்த பிரச்சினையை ஏதேனும் ஒரு வழியில் இரு நாடுகளும் தீர்த்துக்கொள்வார்கள் என நம்புகிறேன். இருநாட்டு தலைவர்களையும் எனக்கு தெரியும். இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே மிகப்பெரிய அளவில் பதற்றம் நிலவுகிறது என்று” என்றார். அவரின் இந்த கருத்து சமூக ஊடகத்தில் பரவத் தொடங்கியதும், டிரம்பை கடுமையாக விமர்சிக்கவும் கலாய்க்கவும் தொடங்கினர்.

இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்து 78 ஆண்டுகள் மட்டுமே ஆகும் நிலையில், 1000 வருடத்துக்கு மேலாக இருநாடுகளும் சண்டையிட்டுக் கொள்வதாக டிரம்ப் கூறியதை பலரும் கிண்டலடித்து வருகிறார்கள்.