ராகுல் காந்தி - மல்லிகார்ஜுன கார்கே
ராகுல் காந்தி - மல்லிகார்ஜுன கார்கே 
இந்தியா

ஆண்டுக்கு ரூ.1 லட்சம்… அரசுப் பணியில் 50% ஒதுக்கீடு! – காங். வெளியிட்ட 5 அசத்தல் அறிவிப்புகள்!

Staff Writer

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்கு ஆண்டுதோறும் ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், பா.ஜ.க.- காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், பெண்களைக் கவரும் விதமாக புதிய வாக்குறுதிகளை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. அதில், காலியாக உள்ள மத்திய அரசுப் பணிகளில் 50 சதவிகிதம் பெண்களுக்கு ஒதுக்கீடு வழங்கப்படும் என்றும், வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்கு ஆண்டுதோறும் ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மத்திய அரசின் கீழுள்ள அங்கன்வாடி, சத்துணவு ஊழியர்களின் ஊதியம் இரண்டு மடங்கு உயர்த்தப்படும் எனவும் பெண்களின் உரிமைகள் குறித்தும், அவர்களின் வழக்குகளுக்கான போராட்டத்தில் உதவுவதற்கும் ஒரு மண்டல அதிகாரி நியமிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதைபோல், நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தபட்சம் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கான சாவித்திரிபாய் புலே பெயரில் தங்கும் விடுதி அமைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.