நாடாளுமன்ற மக்களவையிலும் சட்டமன்றங்களிலும் மகளிருக்கு 33 சதவீத ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை, தொகுதி மறுவரையறை மசோதாக்களுடன் சேர்த்து மத்திய அரசு சிறப்புக் கூட்டத்தில் கொண்டுவந்தது.
இரண்டு நாள் விவாதத்துக்குப் பின்னர் இன்று மாலையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு கிடைக்கவில்லை. இதனால் அந்த மசோதா தோல்வி அடைந்தது.
இந்த மசோதா தோல்வி அடைந்ததால் மற்ற இரு மசோதாக்களையும் மைய அரசு திரும்பப் பெற்றுக்கொண்டது.