உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள தனியார் கட்டடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் படுகாயம் அடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள தனியார் பயிற்சி நிறுவனத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அருகில் இருந்த விளையாட்டு மையத்துக்கும் தீ பரவியது.
இந்தத் தீ விபத்திலிருந்து தப்பிப்பதற்காக கட்டடத்திலிருந்து பலர் கீழே குதித்த காட்சிகளை நேரில் பார்த்ததாக தீ விபத்து ஏற்பட்ட கட்டடத்திற்கு அருகில் இருந்தவர்கள் கூறினர்.
மீீீட்புப் பணிகளை துரிதப்படுத்துமாறு உ.பி. மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
தீயணைப்புப் படை வீரர்களின் உதவியுடன் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கட்டட இடிபாடுகளுக்குள் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
தீ ஏற்பட்டதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. அதுகுறித்த விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.