எச்.ஐ.வி. 
இந்தியா

7 மாதங்களில் 200 பேர் எச்.ஐ.வி.யால் பலி!

Staff Writer

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரோமில் கடந்த 7 மாதங்களில் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட 200 பேர் உயிரிழந்திருப்பதாக அம்மாநில சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் மேலும் கூறியதாவது, 2020 முதல் கடந்த ஜூலை மாதம் வரை எச்.ஐ.வி.யால் 2,996 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், 2023 ஆம் ஆண்டில் அதிகபட்சமாக 632 பேரும், 2022இல் 562 பேரும், 2024இல் 561 பேரும் உயிரிழந்துள்ளனர்.

தற்போது மாநிலம் முழுவதும் 19,837 பேர் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அவர்களில் 18,694 பேர் மையங்களில் சிகிச்சை பெற்று வருவதாகவும், 1,143 பேர் மையங்களில் சிகிச்சை பெறாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்தியாவிலேயே மிசோரோமில் தான் எச்.ஐ.வி. அதிகம் பரவுவதாகக் கூறப்படுகிறது. நரம்பு வழியாக செலுத்தப்படும் போதைப்பொருள் பயன்பாடும், பாதுகாப்பற்ற பாலியல் உறவுகளும் மற்றும் மியான்மர் எல்லைக்குப் பக்கத்தில் இருப்பதுமே காரணம் என்கிறனர்.