மங்களூர் பத்ரியா மசூதி 
இந்தியா

மசூதியில் கல் வீசிய மதவாத பயங்கரவாதிகள்- மங்களூரில் சம்பவம்!

Staff Writer

கர்நாடக மாநிலம் மங்களூரில் மிலாது நபி பண்டிகையை முன்னிட்டு விழாக் கோலம் பூண்டிருந்த மசூதியில் மதவாத பயங்கரவாத கும்பல் ஒன்று கல்வீசித் தாக்குதல் நடத்தியது.

மங்களூர் அருகில் உள்ள கத்திப்பல்லா எனும் இடத்தில் பத்ரியா மசூதியில் நேற்று இரவு 10.30 மணியளவில் இரண்டு பைக்குகளில் வந்த நான்கு பேர் கொண்ட அந்த கும்பல், கல்வீசித் தாக்கியது. இத்தாக்குதலில் மசூதியின் சன்னல்கள் உடைந்து நொறுங்கின.

உடனடியாக உள்ளூர் மக்கள் அங்கு திரண்டனர். காவல்துறைக்குத் தகவல் தெரிவித்ததும் அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

தேடுதல் படை அமைக்கப்பட்டு, கல்வீசியதில் ஈடுபட்ட 5 குற்றவாளிகளை காவல்துறையினர் கைதுசெய்யப்பட்டனர் என்று மங்களூர் காவல்துறை ஆணையர் ஊடகத்தினரிடம் தெரிவித்துள்ளார்.

தற்போதைக்கு அங்கு நிலைமை கட்டுக்குள் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கைதாகியுள்ளவர்கள் விசுவ இந்து பரிசத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram