இந்தியா

இஸ்லாமியர்களுக்கான 5% இடஒதுக்கீடு மகாராஷ்டிராவில் ரத்து!

Staff Writer

மகாராஷ்டிராவில் கடந்த 2014ல் கல்வி, வேலை வாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 5% இடஒதுக்கீடு வழங்க அவசர சட்டம் பிறப் பிக்கப்பட்டது. இந்த உத்தரவு மத அடிப்படையிலானது என மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

உச்ச நீதிமன்றம் விதித்துள்ள 50 % இடஒதுக்கீடு உச்ச வரம்பை மீறுவதாக உள்ளது என வாதிடப்பட்டது. இந்த வழக்கில் அவசர சட்டத்தை அமல்படுத்துவதை மும்பை உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. இந்நிலையில் மகாராஷ்டிராவில் 2014 தேர்தலுக்கு பிறகு பாஜக – சிவசேனா கூட்டணி ஆட்சிக்கு வந்தது.

இந்த அரசு அவசர சட்டத்தை பேரவையில் சட்டமாக நிறைவேற்றவில்லை. இதனால் அந்த அவசர சட்டம் காலாவதியானது. இந்நிலையில் மகாராஷ்டிராவில் நடைமுறைக்கு வராத 5% இடஒதுக்கீடு உத்தரவை மகாராஷ்டிர அரசு நேற்று முறைப்படி ரத்து செய்தது.