மேற்கு வங்க மாநிலத்தில் இன்று நடைபெற்றுவரும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் மதியம் 1 மணி நிலவரப்படி 61.11 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
கடந்த 23ஆம் தேதியன்று 152 தொகுதிகளில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவை அடுத்து, இன்று 142 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
மதியம் 1 மணி நிலவரப்படி, 20 தொகுதிகளில் 65 சதவீத அளவுக்கு வாக்குகள் பதிவாகியுள்ளன.
அதிகபட்சமாக கால்சி தொகுதியில் 70.5 சதவீதம் வாக்குப்பதிவு ஆகியுள்ளது.
இந்தத் தொகுதிகளில் கடந்த 2021ஆம் ஆண்டு தேர்தலில் 80.4 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
முன்னதாக 23ஆம் தேதி நடைபெற்ற முதல் கட்ட வாக்குபதிவில், 62.18 சதவீத வாக்குகள் பதிவாகின என்பது குறிப்பிடத்தக்கது.