4 வழித்தடங்களாக மாறும் ரயில் தடங்கள் 
இந்தியா

இனி சென்னை- டெல்லி ரயிலில் வேகமாகச் செல்லலாம்!

Staff Writer

இந்தியாவில் அதிக நெரிசல் கொண்ட முக்கிய இரயில் தடங்களை நான்குவழித் தடங்களாக மாற்றும் பணிகளை இந்திய ரயில்வே முன்னெடுத்து வருவதாக இரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

இந்திய ரயில்வேயின் போக்குவரத்துத் திறனை அதிகரிக்கும் வகையில், 11,000 கி.மீ. நீளமுள்ள 7 நெரிசல் அதிகமுள்ள ரயில் வழித்தடங்களில் இந்தப் பணியை மேற்கொள்ளவுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் மொத்த ரயில்வே இணைப்பில் 16% மட்டுமே இந்த 7 வழித்தடங்கள் ஆக்கிரமிக்கின்றன. ஆனால், நாட்டின் மொத்த ரயில் போக்குவரத்தில் 41%  கையாளுகின்றன. இதனால் இந்த வழித்தடங்களில் பயணிகள், சரக்கு இரயில்களின் நெரிசல் அதிகமாக உள்ளது.

தற்போது அதிக அளவில் இரயில்கள் இயக்கப்படும் இந்த வழித்தடங்களில், ஒரே பாதையில் பயணிகள் இரயில்களுடன் சரக்கு ரயில்களும் இயக்கப்படுகின்றன.

இதனால் பாதைகளில் நெரிசல் ஏற்படுவதுடன், இரயில்களின் இயக்கத்திலும் தாமதம் ஏற்படுகிறது.

இதைப்போல நெரிசல் மிகுந்த இரயில் தடங்களில், கூடுதல் இரயில் பாதைகளை அமைத்து, ரயில் போக்குவரத்தின் மொத்த திறனை அதிகரிப்பதே இந்த நான்குவழித் தடத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

 4 வழித்தடங்களாக விரிவாக்கம் செய்யப்படும் 7 முக்கிய வழித்தடங்கள் :

 1)      டெல்லி – ஹவுரா

 2)      ஹவுரா – சென்னை

 3)      சென்னை – மும்பை

 4)      மும்பை – டெல்லி

 5)      டெல்லி – சென்னை

 6)      மும்பை – ஹவுரா

 7)      டெல்லி – கவுகாத்தி

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram