கஜூராஹோ விமான நிலையம் 
இந்தியா

விமானமே இல்லாத விமான நிலையம்... சிறந்த விமான நிலையமாக தேர்வு!

Staff Writer

மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள கஜூராஹோ விமான நிலையத்தில் , தற்போது விமான சேவை இல்லாத நிலையிலும், இந்தியாவின் சிறந்த விமான நிலையமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்திய விமான நிலைய ஆணையம் வெளியிட்டுள்ள வாடிக்கையாளர் திருப்திக் குறியீடு தரவரிசையில், பயணிகளுக்கான சேவை, தூய்மை, உள் கட்டமைப்பு, பணியாளர்களின் செயல்பாடு உட்பட்ட அம்சங்களில் கஜூராஹோ விமான நிலையம் முதலிடம் பிடித்துள்ளது.

நடப்பு ஆண்டு ஜூலை மாதம் முதல் இந்த விமான நிலையத்தில் விமான சேவைகள் எதுவும் நடக்கவில்லை. இருப்பினும், இந்த விமான நிலையம் பராமரிப்பு, சேவைத் தரத்தில் சிறந்து விளங்குவதால் இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது.

இந்த விமான நிலையத்தில் சேவைகள் தொடர்ந்த போதும், தில்லி - வாரணாசியை இணைக்கும் இரண்டு விமானங்கள் மட்டுமே இயங்கப்பட்டன. இந்தச் சேவைகளும், இந்த மாதத்தின் தொடக்கத்தில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும், வரும் அக்டோபர் மாதம் முதல் சேவைகள் தொடங்க வாய்ப்புள்ளதாக விமான நிலைய இயக்குநர் சந்தோஷ் சிங் தெரிவித்துள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram