அபிஜீத் தீப்கே 
இந்தியா

போராட்டத் தேதியை அறிவித்த கரப்பான் ஜனதா கட்சி!

Staff Writer

மோசடி செய்யப்படும் தேர்தலை புறக்கணியுங்கள் என்று கரப்பான் ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அபிஜீத் தீப்கே கூறியுள்ள கருத்து:

"தேர்தல்கள் மோசடியாக்கப்பட்டுள்ளது. ஆனால், மோசடி நடக்கிறது என்று கூறிக்கொண்டே தேர்தலில் பங்கேற்றால், அது இந்த முறையற்ற நடைமுறையை ஒரு சுதந்திரமான, நியாயமான தேர்தல் போன்ற மாயையை ஏற்படுத்திவிடும்.

நீங்கள் களத்தில் இருக்கவேண்டும் என்பதற்காக, தேர்தலை குறைகூறிக்கொண்டே அதில் பங்கேற்பது சரியல்ல. இது உங்களுடைய கட்சியை பிளவுபடுத்தி, உங்களை வலிமையற்றவர்களாக மாற்றிவிடும்.

ஒரு போட்டி நியாயமாக நடக்கவில்லை என்று கூறிக்கொண்டே, அதில் விளையாடுவது சரியல்ல. நீங்கள் இந்தத் தேர்தலில் பங்கேற்பதால், அந்த நியாயமற்ற நடைமுறையை நீங்கள் சட்டபூர்வமாக்கி வருகிறீர்கள்.

எனவே, இந்த மோசடியான தேர்தலை புறக்கணியுங்கள்.

மேலும், நாளைக்குள் ஞானேஷ்குமார் பதவி விலகவில்லை என்றால், வரும் அக்டோபர் 2ஆம் தேதி, நாடுதழுவிய போராட்டம் மும்பையிலிருந்து தொடங்கப்படும்.

இந்த காந்தி ஜெயந்தியில், நம் ஜனநாயகத்தைக் காக்க உறுதிமொழி எடுப்பாம்." என்று அபிஜீத் தீப்கே தெரிவித்துள்ளார்.  

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram