அபிஜீத் திப்கே கைது 
இந்தியா

கரப்பான் கட்சித் தலைவர் அபிஜீத் திப்கே விமானத்திலேயே கைது!

Staff Writer

தில்லி ஜந்தர் மந்தர் போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக மும்பையிலிருந்து தில்லிக்குச் சென்ற அபிஜீத் திப்கேவை விமானத்திலே வைத்து தில்லி போலீசார் கைதுசெய்தனர்.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், சிறப்புத் தீவிர வாக்காளர் திருத்தப் பட்டியலில் தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், கரப்பான் கட்சி தில்லியில் போராட்டம் நடத்தத் திட்டமிட்டது.

இதையடுத்து, தில்லியில் இன்று கரப்பான் கட்சி நடத்தத் திட்டமிட்டிருந்த போராட்டத்திற்கு காவல்துறை உரிய அனுமதி அளிக்கவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், தில்லி முழுவதும் 27,000 காவல் அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தில்லியில் பெரும்பாலான மெட்ரோக்கள் மூடப்பட்டு, இணையதள சேவையும் முடக்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் யாரும் போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டாம் என்று தில்லி காவல் துறையினரால் அறிவுறுத்தப்பட்டு உள்ளார்கள்.

இருப்பினும், திட்டமிட்டபடி போராட்டத்தை நடத்த தில்லிக்குச் சென்ற கரப்பான் கட்சியின் தலைவர் அபிஜீத் திப்கே, செய்தித் தொடர்பாளர்கள் சௌரவ் தாஸ், அஷூதோஷ் ரங்கா ஆகியோரை விமானத்தில் வைத்து தில்லி போலீசார் கைது செய்துள்ளனர். 

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram