பூனாவாலா - அபிஜீத் தீப்கே  
இந்தியா

சிறந்த முதல்வர்கள்... பட்டியலிட்ட அபிஜீத் தீப்கே

Staff Writer

மு.க.ஸ்டாலின், பினராயி விஜயன், அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் சிறந்த முதல்வர்கள் என்று கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே கூறியுள்ளார்.

அண்மையில் ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில், நாட்டின் சிறந்த முதல்வராக யாரைக் குறிப்பிடுவீர் என்று அவரிடம் கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர் கூறியதாவது:

“தமிழகத்தின் பொருளாதாரத்தை முன்னேற்றிய மு.க.ஸ்டாலின், சுகாதார முன்மாதிரியாக மாநிலத்தை மாற்றிய பினராயி விஜயன், கல்வி நிலையங்கள், ஆரோக்கியத்தை மேம்படுத்திய அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியார் சிறந்த முதல்வர்களாக இருந்துள்ளனர்.”  என்று அபிஜீத் தீப்கே கூறினார்.

இதுகுறித்து விமர்சித்த பா.ஜ.க.வின் முன்னாள் நிர்வாகி ஷெஹ்சாத் பூனாவாலா,

“சி.ஜே.பி.யைவிட பெரிய மோசடிக் கூட்டத்தை நீங்கள் பார்த்துள்ளீர்களா?

நாட்டின் சிறந்த முதலமைச்சர்களாக பட்டியலிடப்படும் மு.க.ஸ்டாலின் ஆட்சி செய்த 5 ஆண்டுகளில் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியைவிட அவருடைய குடும்ப நலனையே அதிகமாகப் பார்த்தார்.

கொரானா காலத்தில், உத்தரப்பிரதேசத்தைவிட குறைந்த மக்கள்தொகை உள்ள கேரளாவில்தான், அதிக உயிரிழப்பு ஏற்பட்ட நிலையில், அப்போது முதல்வராக இருந்த பினராயி விஜயனை சிறந்த முதல்வர் என்கிறீர்கள்.

அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி கட்சி, 500 புதிய பள்ளிகளைத் திறப்போம் என்று வாக்குறுதி அளித்துவிட்டு, 800 மதுக்கடைகளைத் திறந்துள்ளது. சிறந்த முதல்வர்களை ஏன் மக்கள் நிராகரித்துள்ளார்கள்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.  

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram