அக்னி - 4 ஏவுகணை சோதனை  
இந்தியா

இந்தியாவின் அக்னி - 4 ஏவுகணை சோதனை வெற்றி!

Staff Writer

அக்னி – 4 பாலிஸ்டிக் ஏவுகணையின் சோதனையை இந்தியா வெற்றிகரமாகச் செய்துள்ளது.

இந்த ஏவுகணை, அணு ஆயுதங்களை ஏந்திச்செல்லும் திறன் கொண்டது.

இது குறித்து, மத்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை :

"ஒடிசாவின் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைத் தளத்தில், அக்னி – 4 பாலிஸ்டிக் ரக ஏவுகணையின் சோதனை நடத்தப்பட்டது. இந்தச் சோதனை வெற்றிகரமாக நடைபெற்றது.

இந்த ஏவுகணை 4 ஆயிரம் கிலோமீட்டர்வரை பாய்ந்து, தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டது. மேலும், அணுகுண்டுகள் உட்பட 1000 கிலோ வரையிலான வெடிகுண்டுகளை சுமந்துசெல்லும் வல்லமை கொண்டது.

சாலைகள் மட்டுமல்லாமல், கடினமான நிலப்பரப்பிலும் இந்த ஏவுகணையைச் செலுத்த முடியும் என்பதால், இந்தியாவின் பாதுகாப்பை நிலைநிறுத்துவதில் இவை முக்கிய பங்கு வகிக்கும்." என்று பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, அக்னி பிரைம், அக்னி 3 ஏவுகணைகளின் சோதனையையும் இந்தியா வெற்றிகரமாக மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram