சமையல் அறைகளில் ஏஐ தொழில்நுட்ப கேமராக்கள் 
இந்தியா

ரயில்வே உணவின் சுகாதாரம் இனி ஏஐ வசம் !

Staff Writer

ஏஐ தொழில்நுட்ப கேமராக்களை இரயில் சமையல் அறைகளில் பொருத்தியுள்ளது இந்திய இரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி).

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் இரயில்வே சமையல் அறைகளின் சுகாதாரத்தை உறுதி செய்ய இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சமையல் அறைகளில் ஊழியர்களின் சுகாதாரம், தூய்மை நடவடிக்கைகளில் ஏற்படும் தவறுகள் போன்ற 9 வகையான குறைகளை, சிக்னல்கள் மூலம் இந்த கேமராக்கள் காட்டிக்கொடுத்துவிடும்.

நாடு முழுவதும் உள்ள 800-க்கும் மேற்பட்ட ஐ.ஆர்.சி.டி.சி. சமையல் அறைகளில் 2,394 ஏஐ கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை 24 மணிநேரமும் கண்காணிக்கப்படுகின்றன.

இந்த கேமராக்கள் எறும்பைக்கூட கண்டுபிடிக்கும் அளவிற்கு துல்லியமாகச் செயல்படும். நாடு முழுவதும் உள்ள ஐ.ஆர்.சி.டி.சி சமையல் அறைகள் ஒரே வலையப்பில் இணைக்க வேண்டியுள்ளதால், விரிவாக்கப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் தரமான, பாதுகாப்பான, சுகாதாரமான உணவை இரயில் பயணிகளுக்கு வழங்குவது உறுதி செய்யப்படும் என்று ஐ.ஆர்.சி.டி.சி. மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.