இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் சி-295 ராணுவ விமானத்தின் முதற்கட்ட சோதனை வெற்றியடைந்துள்ளது.
இந்திய விமானப்படைக்காக பல்வேறு வசதிகளுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. ஏர்பஸ் - டாடா அட்வான்ஸ் சிஸ்டம்ஸ் இந்த ராணுவப் போக்குவரத்து விமானத்தை தயாரித்துள்ளது.
இதன் முதற்கட்ட சோதனை வெற்றியடைந்துள்ளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. 9,000 கிலோ வரை எடையைச் சுமக்கும் வகையிலும், 24 படுக்கைகளை வைத்து அவசரப் பிரிவாக செயல்படும் வகையிலும் இந்த விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரே நேரத்தில் 70 ராணுவ வீரர்கள் அல்லது 48 பாராசூட் வீரர்கள் முழு ஆயுதங்களுடன் பயணிக்க முடியும் என்று கூறப்படுகிறது.
பேரிடர் காலங்களில் அனைத்து விதமான கரடு, முரடான பாதைகளிலும் இந்த விமானம் எளிதில் தரையிறங்கி புறப்பட்டுச் செல்லும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
முதல்முறையாக தனியார் நிறுவனம் ஒன்று இந்தியாவிலேயே தயாரிக்கும் முதல் இராணுவப் போக்குவரத்து விமானம் இதுவே ஆகும்.
இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த விமானம் இராணுவத்தில் சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.