கரையைக் கடந்தது அக்வான் புயல் 
இந்தியா

கரையைக் கடந்தது அக்வான் புயல்... 60-க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து!

Staff Writer

ஒடிசாவின் கோபால்பூர் அருகே அக்வான் புயல் கரையைக் கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று காலை 7.30 மணி முதல் 8.30 மணிக்குள், வடக்கு ஆந்திரப் பிரதேசம் – தெற்கு ஒடிசா அருகேவுள்ள ஒடிசாவின் கோபால்பூரில் அக்வான் புயல் கரையைக் கடந்ததுள்ளது.

தீவிரப் புயலாக இருந்த இது வலுவிழந்து புயலாக மாறிய நிலையில், கரையைக் கடக்கும்போது மணிக்கு 70 முதல் 80 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 90 கி.மீ. வேகத்திலும் காற்று வீசியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

அக்வான் புயலுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 9,341புயல் நிவாரண முகாம்களை ஒடிசா அரசு ஏற்பாடு செய்துள்ளது. மூன்று லட்சத்திற்கும் அதிகமான மக்களை அந்த முகாம்களில் ஒடிசா அரசு தங்க வைத்துள்ளது.

அக்வான் புயலின் எதிரொலியாக ஒடிசா, ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் 60-க்கும் மேற்பட்ட ரயில்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த மாநிலங்களில் குறிப்பிட்ட சில விமான சேவைகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram