கரையைக் கடந்தது 'அர்னாப்' புயல் 
இந்தியா

கரையைக் கடந்தது 'அர்னாப்' புயல்... 50 ரயில்கள், 21 விமானங்கள் ரத்து!

Staff Writer

வங்கக்கடலில் உருவான 'அர்னாப்' புயல் கரையைக் கடந்ததாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்த அதிதீவிரப் புயல், ஆந்திரப்பிரதேசத்தின் நரசாபுரம் அருகே கரையைக் கடந்துள்ளது.

புயலின் தாக்கத்தால், ஆந்திரத்தின் பல்வேறு பகுதிகள் பாதிப்படைந்துள்ளன. இரவு முழுவதும் பெய்த மழையால், தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கின.

ஆந்திரத்தில் உள்ள கோனசீமா மாவட்டத்தில் சுமார் 6,000 மின்கம்பங்கள் முறிந்து விழுந்துள்ளதாக அந்த மாவட்டத்தின் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மேலும், புதுச்சேரி ஒன்றியப் பகுதியைச் சேர்ந்த ஏனாமில் புயலின் தாக்கத்தால் பல்வேறு பகுதிகள் பாதிப்படைந்துள்ளன.

'அர்னாப்' புயலைத் தொடர்ந்து, தெற்கு, கிழக்கு கடலோர ரெயில்வே மொத்தம் 50 ரயில்களை ரத்து செய்துள்ளது. மேலும், விசாகப்பட்டினம், விஜயவாடா விமான நிலையத்தில் இருந்து செல்லவேண்டிய 21 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதேபோல, சென்னை விமான நிலையத்தில் இருந்து ஆந்திராவுக்கு புறப்பட வேண்டிய 12 விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram