ஆஷா போஸ்லே 
இந்தியா

ஓ… பட்டர்ப்ளை… செண்பகமே செண்பகமே…. மறக்கமுடியாத ஆஷா போஸ்லே!

Staff Writer

புகழ்பெற்ற திரைப்படப் பின்னணிப் பாடகியான ஆஷா போன்ஸ்லே மும்பை மருத்துவமனையில் இதயக்கோளாறால் மரணம் அடைந்தார் அவருக்கு வயது 92. அவரது மரணத்துக்கு திரை ரசிகர்கள் பலரும் அஞ்சலி தெரிவித்து வருகிறார்கள். தன் பத்தாவது வயதில் மாஜா பால் என்ற மராத்தி திரைபத்தில் பாடத் தொடங்கிய அவர் கடந்த 70 ஆண்டுகளில் 12000த்துக்கும் மேற்பட்ட பாடல்களை பல இந்திய மொழிகளில் பாடி உள்ளார். மறக்கமுடியாத பல இந்திப்பாடல்களைப் பாடி உள்ள இவரது முதல் தனிப்பாடல் ராத் கி ராணி என்ற இந்திப்படத்தில் தொடங்கியது. இவரது சகோதரி இன்னொரு மாபெரும் பாடகியான லதா மங்கேஷ்கர். இவரும் தன் 92 வது வயதில் 2022 ஆம் ஆண்டு மரணமடைந்தார்.

ஆர்டி பர்மன், ஓபி நய்யார், மதன்மோகன் உட்பட்ட பல இசையமைப்பாளர்களுடன் பணிபுரிந்துள்ள இவர் தமிழில் இளையராஜா, ஏ ஆர் ரகுமான் ஆகியோருக்கும் பாடி உள்ளார்.

செண்பகமே செண்பகமே ( எங்க ஊரு பாட்டுக்காரன்), நீ பார்த்த பார்வைக்கு ஒரு நன்றி( ஹே ராம்) செப்டம்பர் மாதம் (அலைபாயுதே), வெண்ணிலா வெண்ணிலா (இருவர்), ஓ பட்டர் ப்ஃளை - மீரா போன்ற பல தமிழ்ப்பாடல்களுக்காக அவர் தமிழ் ரசிகர்களால் நினைவுகூரப்படுவார்.