ஓவியர் டிராட்ஸ்கி மருது 
இந்தியா

ஓவியக் கலைஞர் ட்ராட்ஸ்கி மருதுக்கு இயல் விருது!

Staff Writer

கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் அமைப்பினால் 2001-ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு சேவையாற்றியவர்களுக்கு இயல் விருது, பிற இலக்கிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

2025ஆம் ஆண்டிற்கான விருதுகள் :

1) வாழ்நாள் சாதனைக்கான அ.முத்துலிங்கம் இயல் விருது - ஓவியர் டிராட்ஸ்கி மருது

2) புனைவுக்கான விருது - பா. திருச்செந்தாழை - நெருப்பில் வளர்பவை (நூல்வனம் பதிப்பகம்)

3) புனைவிலிக்கான விருது

* தூக்கு செல்வம் - ஒரு தூக்குக் கைதியின் வாக்குமூலம் (கிழக்கு பதிப்பகம்)

* டாக்டர் சங்கர சரவணன் - வைகறை வாசகன் பதிவுகள் (விகடன் பப்ளிகேஷன்ஸ்).

4) கவிதைக்கான விருது - கருணாகரன் சிவராசா, காணாமலாக்கப்பட்டோருக்காக இரண்டு செயலிகள் (வையம்).

5) மொழிபெயர்ப்புக்கான விருது

* கீதா சுகுமாரன் - A Smile Drying On a Vine - (கொடியில் கிடந்து உலரும் புன்னகை. - பா. அகிலன்), ரெட் ரிவர் பதிப்பகம்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram