முன்னாள் இந்திய அணியின் கிரிக்கெட் கேப்டனான சவுரவ் கங்குலியின் பிறந்தநாளான இன்று, அவரின் பயோபிக் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.
கங்குலியின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் இந்தப் படத்திற்கு 'தாதா - தி சவுரவ் கங்குலி ஸ்டோரி' என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் கங்குலியாக பிரபல பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ் நடிக்கிறார். விக்ரமாதித்ய மோத்வானே படத்தை இயக்குகிறார்; லவ் ரஞ்சன், அங்குர் கார்க் ஆகியோர் தயாரிக்கின்றனர்.
திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், 2002இல் இங்கிலாந்துக்கு எதிரான இந்தியாவின் நாட்வெஸ்ட் கோப்பையின் வெற்றிக்குப் பிறகு லார்ட்ஸ் பால்கனியிலிருந்து அவர் சட்டையை அசைத்துக் கொண்டாடிய தருணத்தை ரீக்கிரியேட் செய்துள்ளது.
பெஹாலாவில் உள்ள அவரது இல்லம், ஈடன் கார்டன் மைதானம் உட்பட்ட முக்கியமான இடங்களில் படப்படிப்பு நடப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதற்கட்டப் படப்பிடிப்பு மும்பையில் நிறைவடைந்ததையொட்டி, இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு தற்போது கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கிய நிலையில், 2027ஆம் ஆண்டு மே 14 அன்று உலகெங்கிலும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.