அமைதியாக, மகிழ்ச்சியாக இருக்கும் தமிழகத்தை மதரீதியாகப் பிரிக்க பா.ஜ.க. முயற்சிப்பதாக கரப்பான் கட்சியின் செய்தித்தொடர்பாளர் சவுரவ் தாஸ் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி நேற்று உச்சநீதிமன்றத்தின் திருப்பரங்குன்றத் தீர்ப்பையொட்டி தன் சமூக ஊடகப் பக்கத்தில் முருகனுக்கு அரோகரா எனத் தமிழிலும் ஆங்கிலத்திலும் இந்தியிலும் பதிவிட்டிருந்தார். அதைப் பல தரப்பினரும் கண்டித்துவருகின்றனர்.
இந்நிலையில், சவுரவ்தாஸ் தனது சமூக ஊடகப் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
"நான் தமிழ் சகோதர, சகோதரிகளுடன் வளர்ந்தவன். ஆனால், இந்து - முஸ்லீம் அடிப்படையில் தமிழகத்தை பா.ஜ.க. பிரிக்க முயற்சிப்பது மிகுந்த வருத்தமளிக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, ஒரு அமைதியான, மகிழ்ச்சியான மாநிலத்தை தீக்கரையாக்க வழிவகுப்பதுபோல உள்ளது. பா.ஜ.க.வின் இதுபோன்ற மலிவான மதவாத அரசியலை நிராகரிப்பது மட்டுமின்றி, அதனை முழு பலத்துடன் எதிர்க்கவும் வேண்டும் என எனது தமிழ் நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
தற்போது இளைஞர்கள் எதிர்கொள்ளும் பெரும் வேலையின்மை, இதர பிரச்னைகள் குறித்து எதுவும் கூறாமல், மதரீதியாக தமிழகத்தைப் பிரிக்க பா.ஜ.க. முயற்சித்து வருகிறது." என்று சவுரவ் தாஸ் கூறியுள்ளார்.