தன்னை எதிர்த்து கோஷம் போட்ட பாஜக இளைஞர் அணியினருக்கு காங்கிரஸ் முன்னாளும் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி சாக்லெட் கொடுத்த சம்பவம் கவனத்தை ஈர்த்துள்ளது.
பிகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதை கண்டித்து, வாக்காளர் அதிகாரம் என்ற பெயரில் நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடந்த 17ஆம் தேதி முதல் யாத்திரை நடத்தி வருகிறார். சசாரமில் தொடங்கிய இந்த யாத்திரை, நாளை பாட்னாவில் நிறைவடைகிறது.
இந்தநிலையில், பிகாரின் ஆர்ரா பகுதியில் ராகுல் காந்தி பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது சாலையின் ஓரத்தில் பாஜக இளைஞர் அணி பொறுப்பாளர்கள் கருப்பு சட்டை அணிந்து கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.
அவர்களை பார்த்ததும் ராகுல் காந்தி சென்ற வாகனம் உடனே நிறுத்தப்பட்டது. கருப்பு கொடி காட்டிய பாஜக இளைஞர்களில் ஒருவரை அவர் தன் பாதுகாப்பு பணியாளர்களிடம் அனுமதி அளித்து அருகில் அழைத்தார். அவருடன் சுருக்கமாக பேசிய பின், அவருக்கு சாக்லெட் கொடுத்து அனுப்பினார். இந்த காட்சி சமூக ஊடகஙளில் வைரலாகி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல், சில நாட்களுக்கு முன்பு நவாடாவில் யாத்திரை சென்ற ராகுல் காந்திக்கு எதிராக பாஜக ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பியபோது, அவர் சிரித்தபடியே பறக்கும் முத்தம் (flying kisses) கொடுத்து எதிர்த்து, நின்ற கூட்டத்தில் பதற்றத்தை குறைத்தார்.
டர்பாங்காவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடியையும், அவரது மறைந்த தாயாரையும் குறை கூறியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பாஜக இளைஞர் அணியினர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.