பாஜக தேசிய தலைவராக நிதின் நவீன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். மிக இளம் வயதில் பாஜகவின் தலைவராகியுள்ளார் இவர்.
பாஜக தேசிய தலைவராக தற்போதுள்ள மத்திய அமைச்சா் ஜெ.பி. நட்டா, கடந்த 2020, ஜனவரியில் பதவியேற்றதைத் தொடர்ந்து, ஜெ.பி.நட்டாவின் மூன்றாண்டு பதவிக் காலம் ஏற்கெனவே நிறைவுற்ற பிறகும் கட்சிப் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக அப்பதவியில் நீடித்து வருகிறாா்.
இதையடுத்து, பாஜகவின் புதிய தேசியத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (ஜன. 19) மாலையுடன் முடிவடைந்த நிலையில், நிதின் நவீனைத் தவிர வேறு எவரும் அக்கட்சியின் உச்சபட்ச பதவிக்கான தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
இதையடுத்து, நிதின் நவீனின் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டு பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், பாஜகவின் புதிய தேசிய தலைவராக நிதின் நவீன் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டட நிலையில், இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
நிதின் நவீன் பற்றி சில…
* பீகார் அமைச்சரையில் அமைச்சராக உள்ளார்.
* 45 வயதான இவர், மிக இளம் வயதில் பாஜகவின் தேசிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
* பீகாரில் உள்ள பங்கிபூரிலிருந்து ஐந்து முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
* பீகாரின் பொதுப்பணித்துறை அமைச்சராக உள்ளார்
* நிதின் நவீன் வலுவான அரசியல் பின்புலத்திலிருந்து வந்தவர். இவரின் தந்தை நபின் கிஷோர் சின்ஹா பாஜகவின் மூத்த தலைவராவார். இவர் 2006 இல் இறந்த பிறகு நவீன் தேர்தல் அரசியலில் நுழைந்தார்.
* ஏபிவிபி மூலம் அரசியலில் நுழைந்த இவர், பின்னர் பாஜகவின் இளைஞர் அமைப்பின் வழியாக வளர்ந்து வந்தார்.
* பாஜகவின் யுவ மோர்ச்சாவின் தேசிய செயலாளராக 2016 முதல் 2019 அவரை இருந்துள்ளார்.
* பீகாரில் குறைந்த எண்ணிக்கையில் உள்ள காயஸ்தா என்ற சாதியைச் சேர்ந்தவர் இவர்.