கரப்பான் கட்சியின் தலைவர்களைக் கைதுசெய்ய பா.ஜ.க. திட்டமிடுவதாக அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் செளரவ் தாஸ் கூறியுள்ளார்.
தலைமைத் தேர்தல் அதிகாரி ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி கரப்பான் கட்சியினர் மும்பையிலும் தில்லியிலும் போராட்டத்தை நடத்தினர்.
அதைத் தொடர்ந்து, வரும் 10ஆம் தேதி, கரப்பான் கட்சியினர் நாடுதழுவிய போராட்டம் நடத்தப்போவதாகவும் அறிவித்தனர்.
இந்தநிலையில், கரப்பான் கட்சியின் தலைவர்களைக் கைது செய்யத் திட்டமிடுவதாக செளரவ் தாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, தனது சமூக ஊடகப் பக்கத்தில் அவர் வெளியிட்ட கருத்தானது:
"என்னையும், அபிஜீத், அசுதோஷ், ரத்னா, பிற கரப்பான் கட்சியின் தலைவர்களைக் கைது செய்ய இந்த அரசு திட்டமிட்டுள்ளது. இத்தகைய சர்வாதிகார நடவடிக்கைகள் பலனளிக்கும் என்று அரசு நினைப்பது தவறு.
இளம் தலைமுறை விழிப்புடன் உள்ளது. நாங்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும், நமது உரிமைகளுக்காகவும் எதிர்காலத்திற்காகவும் தொடர்ந்து போராடுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.
சிறைவாசத்தையோ அல்லது அதைவிட மோசமான சூழலையோ எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால், இவ்வாறு கைது செய்வது, ஒரு பெரும் தவறான நடவடிக்கை. இளைஞர்கள் இதை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்.
போராட்டங்கள் தொடர வேண்டும். அக்டோபர் 10-ஆம் தேதி முதல் மக்கள் மிகப்பெரிய அளவில் ஒன்றுகூடிப் போராடுவதை உறுதிசெய்ய வேண்டும்." என்று சௌரவ் தெரிவித்துள்ளார்.