அப்ஜீத் தீப்கே  
இந்தியா

கரப்பான் பூச்சி கட்சியின் நிறுவனர் வெளியிட்ட வீடியோ!

Staff Writer

கரப்பான் பூச்சி கட்சியின் நிறுவனர் அப்ஜீத் தீப்கே டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவரும் நிலையில், இன்று காலை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

போராட்டத்தை தலைமை ஏற்று நடத்திவந்த ஆர்வலர் அப்ஜீத் தீப்கே, கடந்த சில நாள்களாக உடல்நல பாதிப்பால் மருத்துவ சிகிச்சை பெற்றுவருகிறார்.

இந்நிலையில், அவர் வெளியிட்ட வீடியோவில் கூறியதாவது," கடந்த சில நாள்களாக நான் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தேன். மருத்துவப் பரிசோதனையின் முடிவுகள் வந்துவிட்டன. எனக்கு டைபாய்டு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.

இருப்பினும், தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை எனது போராட்டம் நிறைவடையாது. நாடு முழுவதும் போராட்டம் நடத்திவரும் இளைஞர்களுக்கு நன்றி." என்று கூறியுள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram