கரப்பான் கட்சி நிர்வாகிகளான செளரவ் தாஸ், அஷூடோஸ் ரன்கா கைது 
இந்தியா

கரப்பான் கட்சி நிர்வாகிகள் திகார் சிறையில் அடைப்பு!

Staff Writer

கரப்பான் கட்சியின் நிர்வாகிகளை திகார் சிறையில் 5 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் உட்பட்ட கோரிக்கைகளை முன்வைத்து, கரப்பான் கட்சியினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

தில்லி ஜந்தர் மந்தரில் போராட்டங்கள் நடத்த கரப்பான் கட்சியினர் அனுமதி கோரியிருந்த நிலையில், அதிகாரபூர்வ போராட்டக்களத்திலிருந்து தில்லி ஜந்தர் மந்தரை நீக்கிய தில்லி காவல்துறை, வேறு மூன்று இடங்களைப் போராட்டக் களங்களாக அறிவித்திருந்தது.

இந்நிலையில், கரப்பான் கட்சியின் நிர்வாகிகளான செளரவ் தாஸ், அஷூடோஸ் ரன்கா, அஜிங்கியா ஷிண்டே உட்பட்டோர், போராட்டங்கள் நடத்தத் தடைவிதிக்கப்பட்ட ஜந்தர் மந்தரில் தேசியக்கொடியுடன் நேற்று போராடத் தொடங்கினர்.

இவர்களின் அத்துமீறல் நடவடிக்கையைத் தொடர்ந்து காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்டு, இன்று தில்லி நீதிமன்றத்தில் மூன்று பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில், செளரவ் தாஸ், அஷூடோஸ் ரன்கா ஆகிய இருவரையில் திகார் சிறையில் ஐந்து நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க, தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கைது செய்யப்பட்ட அஜிங்கியா ஷிண்டே விடுவிக்கப்பட்டுள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram