நிதி ஆயோக் கூட்டம் 
இந்தியா

நிதி ஆயோக் கூட்டம் ... 3 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு..!

Staff Writer

நாட்டின் நிதி நிர்வாகம் தொடர்பாக ஆண்டுதோறும் மத்திய அரசு நிதி ஆயோக் கூட்டத்தை நடத்தி வருகிறது. அதேபோல் நடப்பு ஆண்டிற்கான பிரதமர் மோடி தலைமையிலான 10- வது நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் காலை 10 மணி அளவில் தொடங்கியது.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உட்பட அனைத்து மாநில, யூனியன் பிரதேச முதல்வர்கள் கலந்து கொண்டனர் . இந்நிலையில் கர்நாடக முதல்வர் சீதா ராமையா உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பங்கேற்கவில்லை.

மேலும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கேரள முதல்வர் பினராயி விஜயன், பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி ஆகியோர் இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

இந்த ஆண்டு கூட்டத்தின் கருப்பொருளாக ‘விக்சித் பாரத் 2047’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மாநிலங்களின் வளர்ச்சி மற்றும் 2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக உருவாக்குவது இந்த கூட்டத்தின் நோக்கம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மாநில வளர்ச்சி, நிதிப் பகிர்வு, கூட்டாட்சி தத்துவம் குறித்து விவாதிக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

மூன்று ஆண்டுகளாக இக்கூட்டத்தில் கலந்துகொள்ளாத தமிழக முதல்வர் முக ஸ்டாலின், இக்கூட்டத்தில் முதல்முறையாகக் கலந்துகொண்டுள்ளார்.