இந்தியா

கரப்பான் பூச்சி பக்கம் முடக்கப்பட்டது!

Staff Writer

நாடு முழுவதும் திடீர்ப் பரவலான காக்ரோச் ( கரப்பான்பூச்சி) ஜனதா பார்ட்டி என்ற சமூக ஊடகப் பக்கம் முடக்கப்பட்டுள்ளது. 

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த், படித்து வேலையற்ற இளைஞர்களை கரப்பான் பூச்சிகள் என மோசமாகப் பேசியது கடும் சர்ச்சைக்கு உள்ளானது. அதையடுத்து அதற்கு அவர் விளக்கம் அளித்தார்.

இதனிடையே கடந்த 16ஆம் தேதி அன்று தொடங்கப்பட்ட இந்த நையாண்டிப் பக்கத்துக்கு, சில மணி நேரங்களில் இலட்சக்கணக்கானவர்கள் பின்தொடர ஆரம்பித்தனர். சில நாள்களில் மில்லியன் கணக்கில் சென்றது.

ஒரு கட்டத்தில் எதிர்க்கட்சிகளின் தலைவர்களும் இப்பக்கத்தைப் பின்தொடரத் தொடங்கினார்கள்.

அதைவிட முக்கியமாக, ஆளும் பா.ஜ.க.வின் இன்ஸ்டா பக்கத்தைவிடக் கூடுதலாக, 15 மில்லியன் அதாவது 1.5 கோடி பேர் இந்த இன்ஸ்டா பக்கத்தில் இணைந்தனர்.

இந்த நிலையில், இந்தியாவில் மட்டும் இதன் எக்ஸ் பக்கம் இன்று முடக்கப்பட்டது.

அரசுத் தரப்பிலிருந்து சட்டரீதியாக முறையிடப்பட்டதால் இந்தப் பக்கத்தை முடக்கியதாக எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.