வர்த்தக எல்.பி.ஜி. சிலிண்டரின் விலை குறைப்பு 
இந்தியா

வணிக எல்.பி.ஜி. சிலிண்டரின் விலை குறைப்பு!

Staff Writer

வணிக எல்.பி.ஜி. சிலிண்டரின் விலை கடந்த மாதம் அதிகரிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது குறைக்கப்பட்டுள்ளது.

மேற்காசியாவில் ஏற்பட்ட போர்ப் பதற்றத்தால் தடையற்ற கச்சா பெட்ரோலிய விநியோகத்தில் சிக்கல் உருவானது. இதனால், ஹோட்டல் போன்ற இடங்களில் பயன்படுத்தப்படும் வணிக எல்.பி.ஜி. சிலிண்டருக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்தது.

மேலும், இந்த தட்டுப்பாட்டின் எதிரொலியாக எல்.பி.ஜி. சிலிண்டரின் விலை உயர்ந்திருந்தது.

இதனைத் தொடர்ந்து, பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வணிக எல்.பி.ஜி. சிலிண்டரின் விலையை ஜூன் மாதம் ரூ.3,071.50யில் இருந்து ரூ.3,113.50ஆக உயர்த்தியது.

போர்ச் சூழல் சுமுகத்தை எட்டியுள்ள நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தது. இந்த நிலையில், வணிக எல்.பி.ஜி. சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வுக்கு முன்னர், சென்னையில் 14.2 கிலோகிராம் வீட்டு உபயோக எல்.பி.ஜி. சிலிண்டரின் விலை ரூ. 957.50 ஆகவும், 19 கிலோகிராம் வணிக சிலிண்டரின் விலை ரூ. 3,100ஆகவும் இருந்தது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram