இளநிலை சைபர் செக்யூரிட்டி பட்டப்படிப்பு  
இந்தியா

2 ஐ.ஐ.டி.கள் இணைந்து புதுவகை சைபர் செக்யூரிட்டி பட்டப்படிப்பு!

Staff Writer

இந்தியாவின் செயல்முறை சார்ந்த முதல் சைபர் செக்யூரிட்டி இளநிலைப் பட்டப்படிப்பை சென்னை, கான்பூர் ஐ.ஐ.டி.கள் இணைந்து தொடங்கியுள்ளன.

இந்த நான்காண்டுப் படிப்பில், மாணவர்கள் சைபர் பாதுகாப்புத் திறனை திறம்படக் கற்றுக்கொள்ளும் வகையில் வகுப்பறைப் படிப்பையும் தொழில்துறைப் பயன்பாட்டையும் ஒருங்கிணைத்துள்ளது.

இந்தியாவில் தற்போது 15 இலட்சம் இணையப் பாதுகாப்பு வல்லுநர்களின் தேவை இருக்கிறது.

இளநிலைப் பட்ட அளவிலேயே சிறப்புப் பயிற்சிகள் அளிப்பதன் மூலம், அதிகரித்து வரும் வல்லுநர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்தப் புதிய இளநிலைப் பட்டப்படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஜூலை 2026 முதல் தொடங்கும் இந்த நான்காண்டுப் படிப்பின் சிறப்பம்சமாக, இரண்டு ஆண்டுகள் மாணவர்கள் நேரடியாக தொழில்துறையில் பணியாற்றும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

ஆய்வகப் பயிற்சி, நிஜ உலக சைபர் தாக்குதல்களை எதிர்கொள்ளும் திறன், தொழில்துறை அனுபவம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது எதிர்காலத் தேவைகளுக்காக உருவாக்கப்பட்ட பாடத்திட்டமாகப் பார்க்கப்படுகிறது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram