தாதா சாகேப் பால்கே விருது 
இந்தியா

இந்திய அரசின் உயரிய விருது அமெரிக்க பாப் பாடகிக்கா... பரவும் குழப்பம்!

Staff Writer

திரைத்துறையின் உயரிய விருதாக இந்திய அரசின் சார்பில் குடியரசுத் தலைவரால் கொடுக்கப்படும் 'தாதா சாகேப் பால்கே விருது' அமெரிக்கப் பாடகிக்கு கொடுக்கப்படவுள்ளதாக செய்திகள் பரவி குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன.

உண்மையில், மும்பையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று 'தாதா சாகேப் பால்கே விருதுகள்' என்ற தலைப்பில் இந்திய, சர்வதேசக் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா ஒன்றை அறிவித்துள்ளது.

இதில்தான், சிறந்த சர்வதேசக் கலைஞர் என்னும் விருது அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாப் பாடகி டெய்லர் ஸ்விஃப்டுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், 2026ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படத்திற்கான விருதை ரன்வீர் சிங் நடித்த 'துரந்தர்' படம் பெறுகிறது.

சிறந்த நடன இயக்குநருக்கான விருது கூலி படத்தின் 'மோனிகா...' பாடலுக்காக சாண்டி மாஸ்டருக்கு வழங்கப்படுகிறது.

மேலும், இசைத் துறையில் சிறந்த பங்களிப்பிற்காக இசைஞானி இளையராஜாவிற்கும், திரைத் துறையில் சிறந்த பங்களிப்பிற்காக கமலஹாசனுக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram