இந்தியா

ஒரே ஆண்டில் 11,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய டெல் நிறுவனம்!

Staff Writer

கடந்த ஓராண்டில் மட்டும் 11,000 ஊழியர்களை டெல் நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது.

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பல்வேறு காரணங்களைக் காட்டி அதிகளவில் பணி நீக்கங்களைச் செய்துகொண்டு வருகின்றது.

இந்த நிலையில், நிறுவனத்தின் செயல்பாடுகளை நவீனமயமாக்குதல், செலவுகளைக் குறைத்தல், செய்யறிவு மேம்பாடு (ஏஐ) போன்ற காரணங்ளைக் காட்டி பிரபல தொழில்நுட்ப நிறுவனமான டெல் டெக்னாலஜிஸ் 2025 -26 ஆம் நிதியாண்டில் மட்டும் 11,000 ஊழியர்களைப் பணியிலிருந்து விடுவித்துள்ளது.

இந்தத் தகவல் நிறுவனத்தின் சமீபத்திய ’10 - கே’ அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது. இந்த பணிநீக்கங்கள், நிறுவனத்தின் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையில் சுமார் 10 சதவிகிதத்தைக் குறைத்துள்ளதாக அந்த அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது.

இருப்பினும், இதுகுறித்து நிறுவனம் சார்பில் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் அமைதியான முறையில் இந்த பணிநீக்க நிகழ்வு நடந்தேறியுள்ளது.

மேலும், வேலையில்லாத் திண்டாட்டம் பெருகிக் கொண்டிருக்கும் வேளையில் இதுபோன்று ஆயிரக்கணக்கில் பணிநீக்கங்களும் தொடர்ந்த வண்ணம் உள்ளது குறிப்பிடத்தக்கது.