ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள திறந்தவளி நிலக்கரிச் சுரங்கத் திட்டத்தை விரிவுபடுத்துவதற்காக 928.03 எக்டேர் நிலத்தைக் கையகப்படுத்த உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் சத்ரா மாவட்டத்தில் திறந்தவெளி நிலக்கரிச் சுரங்கத்தை விரிவுபடுத்த சுற்றுச்சூழல்,வனம், காலநிலை மாற்ற அமைச்சகத்தின் கீழ் உள்ள வன ஆலோசனைக் குழுவிடமிருந்து ஒப்புதல் கொடுத்துள்ளது.
இந்த விரிவாக்கத் திட்டத்தின் மூலமாக ஆண்டுக்கு 20 லட்சம் டன் வரை நிலக்கரி உற்பத்தி செய்ய முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையொட்டி, 2.43 இலட்சம் சால் மரங்கள், 5.67 இலட்சம் மற்ற மரங்கள் அந்தப் பகுதியிலிருந்து அகற்றப்படும் என்றும், இதனால் மனிதர்களுக்கும் யானைகளுக்கும் இடையேயான மோதல்கள் அதிகரிக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
பொதுவாக, காடுகளை அழித்தல், சுரங்கத் தொழில், விவசாயத்திற்காக நிலங்களை விரிவுபடுத்துவதால், இந்த மனிதர்கள்- யானைகள் மோதல் ஏற்படுகிறது.
மேலும், இந்த நில விரிவாக்கத்தினால் அந்தப் பகுதியை வசிப்பிடமாகக் கொண்டிருக்கும் யானைகள், கழுதைப்புலிகள், நரிகள், மலைப்பாம்புகள் போன்ற உயிரினங்கள் வசிக்கின்றன.
கடந்த 2000 முதல் 2023 வரை நடத்தப்பட்ட ஆய்வில், மனித – யானைகள் மோதல் காரணமாக 1,340 மனித உயிரிழப்புகளும், 400 காயங்களும் ஏற்பட்டுள்ளதாகவும், நடப்பாண்டின் தொடக்கத்தில் மட்டும் 20 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் இந்திய வனவிலங்கு நிறுவனத்தின் ஆராய்ச்சியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுரங்க விரிவாக்கப் பணிகள் தொடங்குவதற்கு முன்னரே, மனிதர்களுக்கும் யானைகளுக்கும் இடையேயான மோதல்களைத் தடுக்கும் வகையில் வனவிலங்கு மேலாண்மைத் திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று வன ஆலோசனைக் குழு தெரிவித்துள்ளது.
இதேபோல, புலிகள், சிறுத்தைகள், கரடிகள், நரிகள் ஆகியவை வசிக்கும் மத்தியப்பிரதேசத்தின், நரசிங்பூரில், மச்ரேவா நீர்த்தேக்கத் திட்டத்திற்கு 492.579 ஹெக்டேர் வனப்பகுதியைக் கையகப்படுத்த முதற்கட்ட அனுமதியை வழங்க வன ஆலோசனைக் குழு பரிந்துரைத்துள்ளது.